விமான நிலைய வருகை தரும் பகுதி தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும்!

கொரோனா வைரஸ் இலங்கைக்குள் பரவுவதைத் தடுப்பதற்காக விமான நிலையத்துக்கு வருகை தரும் பகுதியை மூடிவிட எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.

வெளிச்செல்லும் பகுதி திறந்திருக்கும் என்பதுடன், இலங்கைக்கு வெளியே பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்லும் விமானங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து இடைநிற் பயணிகள் (Passenger transit) செயற்பாடுகளும் நிறுத்தப்பட்டுள்ளன. துறைமுகத்தில் அனைத்து ஏற்றுமதி, இறக்குமதி நடவடிக்கைகளும் தடையின்றி வழமை போன்று மேற்கொள்ளப்படும்.

பயணிகள் நாட்டுக்குள் வருகை தருவதைத் தவிர்ப்பதற்கு துறைமுக அதிகார சபை பின்பற்றும் நடைமுறைகள் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும்.

கொரோனா வைரஸ் பரவுவதன் காரணமாக நாட்டில் உருவாகியிருக்கும் நிலைமைகள் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை இந்தத் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதாக அரசு தெரிவித்துள்ளது.
Previous Post Next Post