ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் முற்றாக முடங்கிப் போயுள்ள அம்பாறை மாவட்டம்!!

இலங்கையில் நேற்று முன்தினம் மாலை ஆறு மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த ஊரடங்கு சட்டம் போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று முன் தினம் தொடக்கம் இலங்கையின் பல பகுதிகள் வெறிச்சோடிப் போயுள்ளன.

அதன்படி அம்பாறை மாவட்டம் இரண்டாவது நாளாகவும் இன்று முற்றாக முடங்கியுள்ளது.

அத்துடன், அம்பாறை மாவட்டத்தில் வீதிகளில் படையினர் கடமையிலிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.Previous Post Next Post