யாழில் மூவர் கைது!

ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்த வேளையில், வீதியில் நடமாடிய மூவரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட மூவரும், யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்டவர்கள் என்றும் யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளைஞர்கள் மூவரும் சுமார் 20 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவர்களை விசாரணையின் பின்னர், நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், நேற்று மாலை 6 மணி முதல் எதிர்வரும் 23ம் திகதி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post