ஜூம்ஆ தொழுகைக்காக பள்ளிவாசல்களில் ஒன்று கூட வேண்டாம் என அறிவிப்பு!

ஜூம்ஆ தொழுகைக்காக இன்று(வெள்ளிக்கிழமை) பள்ளிவாசல்களில் ஒன்று கூட வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை மீண்டும் முஸ்லிம் மக்களிடம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் நிலவும் கொரோனா அபாயம் காரணமாக ஒன்று கூடல்களை தவிர்க்குமாறும், அவ்வாறு ஒன்றுகூடுவது சட்டத்திற்கு முரணானது என, அரசாங்கம் அறிவித்துள்ளமையினால், அதன்படி செயற்பட வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய ஜூம்ஆ தொழுகைக்காகவோ அல்லது ஐவேளை தொழுகைக்காகவோ மஸ்ஜித்களில் ஒன்று சேர்வதைத் தவிர்த்து, தாம் இருக்கும் இடங்களில் தொழுதுகொள்ளும் படி வக்ப் சபையும், முஸ்லிம் சமய பண்பாட்டுத் திணைக்களமும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையும் அறிவித்துள்ளது.
Previous Post Next Post