இலங்கையில் கொரோனா வைரஸ் தொடர்பில் பரவும் வதந்தி- விமான படை தகவல்!!

இலங்கையில் கொரோனா வைரஸை அழிக்க ஹெலிகொப்டர் மூலம் கிருமிநாசினி வீசப்போவதாக வெளியான செய்தியை விமான படை மறுத்துள்ளது.

நேற்றிரவு 11.30 மணியளில் ஹெலிகொப்டர் மூலம் நாடாளவிய ரீதியில் கிருமிநாசினி வீசவுள்ளதாக சமூக வலைத்தளங்கள் மற்றும் சில இணையத்தளங்களில் செய்தி வெளியாகி உள்ளன.

இது முற்றிலும் போலியான தகவல் என இலங்கை விமான படை மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக இந்தத் தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post