புகையிரதத்துடன் மோதி ஒருவர் பலி!!

கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கம்பஹா புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதத்துடன் மோதி பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். 

நேற்று (29) காலை 11.20 மணியளவில் மாத்தளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Previous Post Next Post