கொரோனா பீதிக்கு மத்தியில் ஏவுகணை பரிசோதித்த வடகொரியா

வடகொரியா இன்று ஏவுகணை ஒன்றை பரிசோதித்துள்ளதாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

கிழக்கு ஜியோன்கன் மாகாணத்தில் இருந்து ஜப்பான் கடல் பகுதிக்கு ஏவப்பட்ட இந்த ஏவுகணை பெலஸ்டிக் ஏவுகணை என அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறுந்தூரம் செல்லும் இந்த ஏவுகணை 410 கிலோ மீற்றர் உயரத்திலும் 50 கிலோ மீற்றர் தூரத்திற்கும் பயணித்துள்ளது.

வடகொரியாவில் இந்த நிலைமை தொடர்பாக கண்காணித்து வருவதாக தென் கொரியாவின் கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 என்ற கொரோனா வைரஸ் உலகத்தை அச்சுறுத்தி வரும் வேளையில் வடகொரியாவின் இந்த செயல் பொருத்தமற்றது எனவும் அவர் கூறியுள்ளார்.

வடகொரியா இந்த மாத ஆரம்பத்தில் பயிற்சியின் ஒரு பகுதியாக சில ஏவுகணை விண்ணில் செலுத்தியது.

A missile launch in North Korea
Previous Post Next Post