எரிபொருள் நிரப்பு நிலையங்கள் திறந்திருக்கும்; பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு!!

ஊரடங்கு சட்டத்தின்போது நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் திறந்திருக்கும் என்று பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

எரிபொருள் விநியோகத்தை இடையூறு இன்றி மேற்கொள்ளவே இந்த நிரப்பு நிலையங்கள் திறந்துவைக்கப்படுவதாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய சேவை என்ற அடிப்படையில் நாடாளாவிய ரீதியில் உள்ள 480 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் திறந்துவைக்கப்படுகின்றன.

இதேவேளை ஊடகம் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு ஊரடங்கு வேளையிலும் எந்த இடத்துக்கும் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post