கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க விமான பயணத்தை நிறுத்தியது தாய்வான்!!

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தாய்வான், இன்று (ஞாயிற்றுக்கிழமை) பயணக் கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்கியுள்ளது.

அதன்படி மார்ச் 24 முதல் ஏப்ரல் 7 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் தாய்வான் வழியாக மேற்கொள்ளப்படும் அனைத்து விமானப் போக்குவரத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தக்கத்துக்குள்ளான மேலும் 16 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் நாட்டில் வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 169 ஆக அதிகரித்ததை அடுத்தே இந்த தீர்மனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோன வைரஸ் பரவ ஆரம்பித்த காலத்தில் அங்கு குறைந்த எண்ணிக்கையிலானவர்களே பாதிக்கப்பட்டிருந்தபோதும் வெளிநாட்டு பயணிகளின் வருகையினால் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
Previous Post Next Post
HostGator Web Hosting