மருந்துகள் வீட்டிற்கே கொண்டுவந்து தரப்படும்; வாட்சாப் இலக்கம்விரைவில்!!

நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதிகளில் மருந்தகங்களில் மருந்து பெற்றுக் கொள்ள முடியாத நோயாளிகளின் சிரமங்களை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய நகரங்களின் அனைத்து மருந்தகங்களும் திறக்கப்பட்டு அதன் பொதுவாக இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

அதன் பின் தங்களுக்கான மருந்து வகைகளை Whatsapp ஊடாக அந்த இலக்கங்களுக்கு அனுப்பி வைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது.

அதற்கமைய அந்த மருந்துகள் வீட்டிற்கே கொண்டுவந்து தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான தபால் திணைக்களத்தின் ஊழியர்களின் உதவிகளும் பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் விசேட கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post