கல்முனை ஸ்ரீ தரவைசித்தி விநாயகர் ஆலயத்தில் கணபதி மந்திர யாகம்

செ.துஜியந்தன்

இன்று கல்முனை ஸ்ரீ தரவைச்சித்தி விநாயகர் ஆலயத்தில் தற்போது நாட்டையும் உலகையும் அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்சிடம் இருந்து மக்களைப்பாதுகாகக்வேண்டி கணபதி மகா மந்திர ஹோமம் நடைபெற்றது.

கல்முனை இந்து ஆலயங்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ் மகா யாகமானது கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் சிவஸ்ரீ க.கு.சச்சிதானந்தம் சிவம் குருக்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் கல்முனை ஸ்ரீ தரவைச்சித்தி விநாயகர் ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ க.விஜயகுமார் குருக்கள், கல்முனை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் சிவஸ்ரீ கா.இராசசிங்கம் குருக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Previous Post Next Post