மலேரியாவிற்கு பயன்படுத்திய மருந்தை கொரோனாவுக்கு பயன்படுத்த நடவடிக்கை!!

மலேரியாவிற்கு பயன்படுத்திய மருந்தை கொரோனாவுக்கு பயன்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர், "மலேரியா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையின் போது வழங்கப்படும் க்லொரோக்வீன் (Chloroquine) என்ற மருந்தினை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு தேவையேற்படும் பட்சத்தில் வைத்தியர்களின் ஆலோசனைகளுடன் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வைத்தியசாலைக்குள் மாத்திரம் இந்த மருந்தினை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த மருந்தானது கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதைத் தவிர்த்துக் கொள்வதற்காக வழங்கப்படுவதல்ல. எவ்வாறிருப்பினும் மக்கள் அனைவரும் உரிய சுகாதார ஆலோசனைகளைப் பெற்று வீட்டினுள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post Next Post
HostGator Web Hosting