வவுனியா பாவற்குளம் கிராமத்தில் தாய் சேய் சுகாதார நிலையம் திறப்பு.

வவுனியா பாவற்குளம் கிராமத்தில் தாய் சேய் சுகாதார நிலையமொன்று இன்று திறந்து வைக்கப்பட்டது.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மேற்படி நிலையத்தை திறந்து வைத்தார்.

வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். பவானி பசுபதிராஜா அவர்களது தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திரு கே.தெய்வேந்திரன் வவுனியா மாவட்ட மேலதிக செயலாளர் திரு.ரி திரேஸ்குமார், வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலாளர் திரு.கே.சிவாகரன், வெங்கலச்செட்டிகுளம் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர்.வி.சுரேந்திரன் ஆகியோர் மேற்படி நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.Previous Post Next Post