"கண்ணா லட்டு திங்க ஆசையா" பட நடிகர் திடீர் மரணம்; அதிர்ச்சியில் திரையுலகம்!!

கண்ணா லட்டு திங்க ஆசையா படத்தின் மூலம் அறிமுகமானவர் சேதுராமன் இவர் நடிகர் மட்டுமின்றி மருத்துவரும் கூட. இதை தொடர்ந்து இவர் ஒரு சில படங்களில் நடித்தார். மேலும், இவர் நடிகர் சந்தானத்தின் நெருங்கியா நண்பரும் கூட.

சேதுராமனுக்கு இன்று மாரடைப்பு வர, சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார், இந்த தகவலை நடிகர் சதீஷ் டுவிட்டரில் பகிர்ந்தார்.

மேலும், இந்த செய்தி ஒட்டு மொத்த திரையுலகத்தையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஏனெனில் சேது ராமனுக்கு மிக குறைந்து வயது என்பதால், இந்த வயதிலேயே மாரடைப்பா அதுவும் ஒரு மருத்துவருக்கே இப்படியா? என்று அனைவரும் அதிர்ச்சி ஆகியுள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post