சிறுவர் துஷ்பிரயோக வீடியோ; சந்தேகநபர் ஆடிஅம்பலமவில் கைது!!

சமூக ஊடகங்களில் பரவி வந்த சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்யும் வீடியோவுடன் தொடர்புடைய சந்தேகநபர் நேற்று (19) ஆடிஅம்பலம பிரதேசத்தில் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் ஆடிஅம்பலம பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய நபர் எனவும், துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சிறுமியின் உறவினர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சிறுமியின் வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் பல சந்தர்ப்பங்களில் சந்தேக நபரினால் சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த சிறுமி நீதிமன்ற வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் இன்று (20) புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Previous Post Next Post