வவுனியா அரச அலுவலருக்கு கொரோனா தொற்று இல்லை!

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் கடைமையாற்றும் அரச உத்தியோகத்தர் ஒருவர் கொரோன வைரஸினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்

வவுனியா செட்டிகுளத்தை சேர்ந்த குறித்த நபர் வெளிநாட்டில் வசிப்போருடன் தொடர்புகளை பேணியதன் காரணத்தினால் சந்தேகத்தின் அடிப்படையில் வவுனியா பொது வைத்தியசாலையின் தொற்றுநோய் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த வைத்தியர்கள் அவரின் இரத்த மாதிரிகளை பெற்று அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மேலதிக பரிசோதனைகளிற்காக அனுப்பிவைத்திருந்தனர்.

இந்நிலையில் அவர் கொரோனோ வைரஸினால் பாதிக்கப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Previous Post Next Post