கொரோனாவுக்கு எதிரான போரில் மக்களே மதிப்புமிக்க வீரர்கள்- மோடி

கொரோனாவுக்கு எதிரான போரில் மக்களே மதிப்புமிக்க வீரர்கள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அத்துடன், மக்கள் ஊரடங்குக்கு நாட்டு மக்கள் அளித்த ஒத்துழைப்புக்கு பிரதமர் மோடி மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.

டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் வெறிச்சோடியிருந்த வீடியோக்களை தனது டுவிற்றரில் அவர் வெளியிட்டு சில கருத்துகளை பதிவிட்டிருந்தார்.

அதில் அவர் கூறுகையில், "கொரோனாவுக்கு எதிரான போரில் மக்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும்தான் மதிப்புமிக்க வீரர்கள். உங்களின் எச்சரிக்கையும், உஷார் நிலையும்தான் இலட்சக் கணக்கானவர்களின் உயிரைப் பாதுகாக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கொரோனா வைரசுக்கு எதிரான பணிகளில் ஈடுபட்டிருப்போரை ஊக்குவிக்கும் வகையில் நாட்டு மக்கள் தங்கள் கைகளைத் தட்டி பாராட்டுத் தெரிவித்து இருந்ததற்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post