இந்து ஆலயங்களில் திருவிழாக்களையும், மஹோற்சவங்களையும் தவிர்க்குமாறு கோரிக்கை!!

இந்து ஆலயங்களின் ஒன்றியத்தின் நிர்வாகத்தினரால் ஊடகவியலாளர் சந்திப்பு வவுனியா ஆதிவிநாயகர் ஆலய மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. 

இதன்போது நாட்டில் அச்சுறுத்தல் விடுக்கும் விடயமாக கருதப்படும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் வவுனியா அரசாங்க அதிபர் மற்றும் பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கு அமைய வவுனியாவில் இருக்கும் இந்து ஆலையங்களில் இடம்பெறும் நித்திய நைமித்திய பூஜை நிகழ்வுகளின் போது மக்கள் கூடுவதை தவிர்த்து ஆலய கடமைகளை நிறைவேற்ற வேண்டுமென அனைத்து இந்து ஆலையங்களின் பரிபாலன சபையினருக்கும் பக்தர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கபட்டது.

இதன்போது இந்துக்களின் கடமையாக இருக்கும் நித்திய நைமித்திய பூஜைகளை சுகாதார சீர்கேடு ஏற்படாத வகையில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும், திருவிழாக்கள், மஹோற்சவங்களை தற்காலிகமாக தவிர்க்குமாறும் தெரிவித்தனர்.

குறித்த தகவலை அனைத்து ஆலயங்களின் நிர்வாகத்தினரையும் திரட்டி பரிமாறும் சூழ்நிலை இல்லாத காரணங்தினால் ஊடகசந்திப்பின் மூலம் தெரியப்படுத்தப்படுவதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
Previous Post Next Post
HostGator Web Hosting