ம.தெ.எ.பற்று பிரதேச சபை உறுப்பினர் வினோராஜ் அவர்களால் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு!!

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் மேகசுந்தரம் வினோராஜ் அவர்களினால் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய உணவுப் பொதிகள் தற்போதுள்ள ஊரங்கு சட்டத்தினால் பாதிக்கப்பட்ட வறுமைக் கோட்டிற்குள் வாழும் குடும்பங்களுக்கு அவர்கள் வீடு தேடிச் சென்று இன்று வழங்கி வைக்கப்பட்டது.

கடந்த கால இயற்கை அனர்த்தங்களின் போதும் இவ்வாறான மனிதநேயமுள்ள முன்மாதிரியான செயல்களை வினோராஜ் அவர்கள் மேற் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய தினம் சமூக சிந்தனை கொண்ட இளைஞர்களின் பங்களிப்போது தன் சொந்த நிதியில் களுதாவளை 4 ம் குறிச்சி மற்றும் களுவாஞ்சிகுடியின் சில பகுதிகள், எருவில் பாரதிபுரம் ,பட்டிருப்பு போன்ற இடங்களிற்கு நேரடியாக சென்று இவ் உணவுப் பொதிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வைத்தார்.

இதே வேளை இந்தப் பணி நாளைய தினமும் தொடரவிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

Previous Post Next Post