யாழில் சமகால அரசியல் தெளிவூட்டல் உரையரங்கு.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் யாழ்  மாவட்ட உறுப்பினர்களுக்கான சமகால அரசியல் தெளிவூட்டல் உரையரங்கு இன்றையதினம் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் துணை பொதுச் செயலாளர் திரு சண் தயாளன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்வுரையரங்கில் ஜெனிவா-உண்மைகளும் மாயைகளும் என்ற தலைப்பில் அரசியல் கருத்தியலாளர் திரு. நிலாந்தன் அவர்களும், ஊடகங்கள் சொல்லும் அரசியலைப் புரிந்து கொள்ளல் என்ற தலைப்பில் யாழ்ப்பாணப் பல்கலைகழக ஊடகக் கற்கைகள் துறைத் தலைவர் கலாநிதி சி. ரகுராம்; அவர்களும், வழிவரைபடம் இல்லாத தமிழ்த் தேசிய அரசியல் என்ற தலைப்பில் தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் திரு. வி.எஸ். சிவகரன் அவர்களும் உரையாற்றினார்கள்.

இவர்களுடன், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் திரு. பொ. ஐங்கரநேசன் அவர்கள் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் நிலைப்பாடு தொடர்பாக உரையாற்றி இருந்தார்.

இவ்வுரையரங்கில் வீரசிங்கம் மண்டபம் கொள்ளாத அளவுக்குத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Previous Post Next Post