இன்று கிருமி அழிக்கும் செயற்திட்டம் முன்னெடுப்பு!!

செ.துஜியந்தன்
மண்முனை தென் எருவில்பற்று பிரதேசபையின் சுகாதாரப்பிரிவினரால் இன்று கிராமங்களிலுள்ள பொது இடங்களில் கிருமி ஒழிக்கும் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டது.

வருமுன் காப்போம் செயற்திட்டத்தின் கீழ் மண்முனை தென் எருவிலபற்று பிரதேசபையினால் இவ் கிருமி ஒழிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக பிரதேச சபையின் தவிசாளர் யோகநாதன் தெரிவித்தார். இன்று ஊரங்குச்சட்டம் அமுலில் இருந்தபோதிலும் மக்களின் சுகாதாரபாதுகாப்பைக்கருத்தில் கொண்டு மட்டுப்படுத்தப்பட்டளவில் இக் கிருமி ஒழிக்கும் செயற்பாடுகள் நடைபெற்றன. 

இதற்கமைய பொது இடங்கள், பொதுச்சந்தை, பஸ்தரிப்பு நிலையம், பயணிகள் தரித்துநிற்கும் பஸ்தரிப்பு இடங்கள் என்பவவையும் இவ் கிருமி ஒழிப்பு செயற்திட்டத்தின் உள்வாங்கப்பட்டன.

அத்துடன் மக்களை விழிப்புணர்வூட்டும் செயற்திட்டங்களையும் பிரதேச சபை முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post