ஏறாவூரில் குழந்தையில்லா தம்பதியினருக்கான இலவச கருத்தருப்பு ஆலோசனை கருத்தரங்கு.

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ZA.நஸீர் அகமட் அவர்களின் ஏற்பாட்டில் குழந்தையில்லா தம்பதியினருக்கான இலவச கருத்தருப்பு ஆலோசனை கருத்தரங்கு இன்றையதினம் ஏறாவூர் அல் முனீறா மகளிர் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் விசேட இந்திய மகப்பேற்று வைத்திய நிபுணர்களான நிர்மலா சதாசிவம், ஸ்ரீரேவதி சதாசிவம், எம்.என். சதாசிவம் ஆகியோர் கலந்து கொண்டதோடு ஏறாவூர் பற்று பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் நாகமணி கதிரவேல் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

குறித்த இலவச மருத்துவ ஆலோசனை வழங்கும் முகாமில் குழந்தைப் பேறில்லாத பல தம்பதிகள் வருகை தந்து வைத்திய ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் சிகிச்சைகளையும் இலவசமாகப் பெற்றுக்கொண்டதோடு இவ்வாறான வழிகாட்டலை ஏற்படுத்திய முன்னாள் முதல்வருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் கலந்துகொண்ட பொதுமக்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.


Previous Post Next Post