சுவாசக் கோளாறு உள்ள நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை!

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக சுவாச கோளாறு மற்றும் அதிக காய்ச்சலுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அனைத்து நோயாளிகளையும் கொரோனா அறிகுறிகளுக்காக பரிசோதனை செய்ய இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை முடிவு செய்துள்ளது.

கொரோனா பரிசோதனைக்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை புதிதாக வெளியிட்ட அறிவுரையின்படி, கொரோனா பாதித்தவர்களுடன் நேரடியாக தொடர்பில் இருந்து நோய்க்கான அறிகுறி இல்லாதவர்களுக்கு 5 முதல் 14 நாட்களுக்குள் ஒருமுறை சோதனை செய்யப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து புதிய நடைமுறையை இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, சுவாச கோளாறு மற்றும் அதிக காய்ச்சலுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அனைத்து நோயாளிகளையும் கொரோனா பரிசோதனை செய்யப்படவுள்ளது.
Previous Post Next Post