இலங்கைக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கியது உலக சுகாதார ஸ்தாபனம்!

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கைக்கு நன்கொடை வழங்கியுள்ளது.

105 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் பங்களிப்புடன் இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்கான சிகிச்சைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்குடன் உலக சுகாதார ஸ்தாபனத்தால் இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Previous Post Next Post