கொரோனாவுக்கு ஓராண்டுக்குள் மருந்து – விஞ்ஞானிகள் நம்பிக்கை!

கொரோனா தடுப்பு மருந்தை இன்னும் ஓராண்டுக்குள் கண்டுபிடித்து விடுவோம் என பிரித்தானிய விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

சீனாவில் இருந்து உலகம் முழுவதும் கொரோனா பரவி உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதையடுத்து கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பது தொடர்பான ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் நடைபெற்று வருகின்றது.

இந்தநிலையில் குறித்த முயற்சியில் பிரித்தானிய விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு தலைமை வகிக்கும் பொதுசுகாதார ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் தலைவரும், விஞ்ஞானியுமான MILES CARROLL இன்னும் ஓராண்டுக்குள் மருந்தை கண்டுபிடித்து விடுவோம் என தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post