தற்போதைய ஆட்சியாளர்கள் இணங்கினால் நிரந்தர அரசியல் தீர்வு ஏற்படும்- சுமந்திரன்!!

தற்போதைய ஆட்சியாளர்கள் இணங்கினால் நிரந்தர அரசியல் தீர்வு ஏற்படுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

'ஒருமித்த கருத்து ஒருமித்த பயணமும்' என்ற தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் எதிர்வரும் பொதுத்தேர்தலின்போது நிரந்தர அரசியல் தீர்வை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படுமெனவும் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.

எனவே எதிர்வரும் பொதுத்தேர்தலினை அதற்கான கருவியாக பயன்படுத்திக்கொள்வதற்கு சகல தமிழ் பிரதிநிதிகளும் ஒருமித்து செயற்பட வேண்டிய தேவை உள்ளதாக அவர் சுட்டிகாட்டியுள்ளார்.


Previous Post Next Post