கொரோனா வைரஸ் தொற்று; தாய்லாந்தில் முதலாவது மரணம்!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தாய்லாந்தில் 35 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஜனவரி 30 ஆம் திகதியில் இருந்து தாய்லாந்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் 42 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 30 பேர் குணமடைந்து வீட்டிற்குச் சென்றுள்ளனர், மேலும் 11 பேர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக நோய் கட்டுப்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.Previous Post Next Post