ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டமைக்கான காரணம் என்ன? இராணுவ தளபதி விளக்கம்

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்றும் நோக்கில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுட்டிருக்கும் என்ற சந்தேகத்தில் நாடு முழுவதும் 11842 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி குறிப்பிட்டார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை கட்டுப்படுத்த மக்கள் முழுமையான ஆதரவு வழங்க வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் இந்த நிலைமை ஆபத்தாகும். நாட்டை குறித்து சிந்தித்து செயற்படுமாறு பொது மக்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.

மக்களின் பாதுகாப்பை கருதியும் கொரோ தொற்று பரவலை தடுக்கவுமே ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

எப்படியிருப்பினும் பொலிஸ் ஊரடங்கு சட்டத்தினால் அத்தியாவசிய சேவைக்கு பாரிய அழுத்தம் ஏற்படாதென கொரோனா தடுப்பு தேசிய பிரிவு தெரிவித்துள்ளது.
Previous Post Next Post