மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்க விடுதலை!!

படுகொலை சம்பவம் தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்டு வெலிகடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்க விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிங்களே அமைப்பின் தலைவர் மெடில்லே பஞ்ஞாலோக்க தேரர் தெரிவித்துள்ளார்.

அவருடன் மேலும் சில இராணுவத்தினர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சுனில் ரத்நாயக்க தனது வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாகவும் அதன் பின்னர் அவர் ஊடகங்களிடம் அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளதாகவும் பஞ்ஞாலோக்க தேரர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ் மிருசுவில் பிரதேசத்தில் தமிழ் பொது மக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சுனில் ரத்நாயக்கவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தது.

இவர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவும் பரப்பான சூழ்நிலையில் முன்னாள் இராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்க விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post