ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதும் உடனடியாக கூட்டுறவு வர்த்தக நிலையங்கள் திறக்கப்படும்!!

ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதும் உடனடியாக கூட்டுறவு வர்த்தக நிலையங்கள் திறக்கப்படும் என கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் சுவிந்த சிங்கப்புலி தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதும் மக்களுக்கு தேவையான உணவு பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கூட்டுறவு வர்த்தக நிலையங்களில் அத்தியவசிய உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால், மாகாண கூட்டுறவு ஆணையாளர் மூலம் வரையறுக்கப்பட்ட இலங்கை கூட்டுறவு விற்பனை சங்கத்துடன் இணைந் பொருட்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆணையாளர் கூறியுள்ளார்.

அத்துடன் வரையறுக்கப்பட்ட இலங்கை கூட்டுறவு விற்பனை சங்கத்திடம் கூட்டுறவுச் சங்கங்களுக்கு தேவையான அத்தியவசிய உணவு பொருட்கள் போதுமான வகையில் இருப்பதாகவும் சுவிந்த சிங்கப்புலி குறிப்பிட்டுள்ளார்.
Previous Post Next Post