இலங்கையில் கொரோனா வைரஸினால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் யார்?

இலங்கையில் கொரோனா தொற்றினால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் தொடர்பான தகவலை சுகாதாரதுறை அமைச்சு வெளியிட்டுள்ளது.

அதற்கமைய 41 - 50 வயதிற்குட்பவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதுவரை அடையாளம் காணப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது 41 - 50 வயதிற்குட்பவர்கள் 32.1% வீதமாகும்.

நோயாளர்களின் 19.2% வீதமானோர் 31 - 40 வயதுயடைவர்கள். மேலும் 16.7% வீதமானோர் 51 - 60 வயதிற்குட்பட்டவர் என சுகாதார பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் 82 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரதுறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை மூவாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தும் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருகின்றனனர்.
Previous Post Next Post