திருகோணமலையில் விசேட பாதுகாப்பு நடவடிக்கையில் முப்படையினர்!!

திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய், முள்ளிப்பொத்தானை, திருகோணமலை, கிண்ணியா மற்றும் சீனக்குடா போன்ற பிரதேசங்களில் ஊடரங்குச் சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் பொதுமக்கள் வீதிகளில் ஒன்று சேர்வதை கட்டுப்படுத்த இன்று முப்படையினரும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதை காணக்கூடியதாக உள்ளது.

இதேவேளை பிரதான வீதிகளில் விசேட வீதிச் சோதனை நடவடிக்கைகளையும் இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளனர். அத்தியவசிய சேவையான சுகாதார சேவைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. 

கந்தளாய் வைத்தியசாலைகளுக்கு வரும் நோயளர்கள் அவசர சிகிச்சை பிரிவுகள் ஊடாக சிகிச்சைகளை பெற்றுச் செல்வதையும் காணக்கூடிதாக இருந்தது.
Previous Post Next Post