தீவிரமாக முயற்சித்தும் ரணிலையும் சஜித்தையும் இணைக்க முடியவில்லை..

தாம் தீவிரமாக முயற்சித்த போதும் ஐக்கிய தேசியக்கட்சியின் ரணில் தரப்பும் சஜித் தரப்பையும் இணைக்க முடியவில்லை.

ஐக்கிய தேசியக்கட்சி உடைந்துப்போய்விடக்கூடாது என்பதற்காக கடந்த ஐந்து மாதங்களாக முயற்சிகளை மேற்கொண்டபோது அது சாத்தியப்படவில்லை என்று அவர் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்தே பொதுத்தேர்தலில் போட்டியிடவோ அல்லது தேசியப்பட்டியலை பெற்றுக்கொள்ளவோ முனையவில்லை என்று நாடாளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

இரண்டு பிரிவுகளும் மீண்டும் இணையாத வரையில் தாம் எந்த தரப்புக்கும் ஆதரவு தரப்போவதில்லை என்றும் ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் நாட்டின் நடப்பு பிரச்சனை தீர்ந்து தேர்தல் நடத்தப்படவேண்டும் என்று தாம் பிரார்த்திப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Previous Post Next Post