புத்தாண்டை கொண்டாட எண்ண வேண்டாம் - மருத்துவர் அனில் ஜாசிங்க!!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டை கொண்டாட எண்ண வேண்டாம் என கேட்டுக்கொள்வதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

சிங்கள தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவது முழுமையாக கட்டுப்படுத்தப்படாத நிலைமையில், புத்தாண்டை கொண்டாட தயாராக வேண்டாம் என தான் முழு நாட்டு மக்களிடமும் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

பரவி வரும் வைரஸ் மேலும் சில மாதங்களுக்கு எந்த மட்டத்திலாவது நாட்டுக்கு இருக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலைமை தவிர்ப்பது மக்களின் மிகப் பெரிய பொறுப்பு எனவும் அரசாங்கம் வழங்கும் ஆலோசனைகளுக்கு அமைய தூர இடைவெளியை முடிந்தளவில் பேணுமாறும் அனில் ஜாசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
Previous Post Next Post