வவுனியா வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை!

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் நேரத்தில் பொதுமக்கள் முண்டியடிக்க வேண்டாம் என வவுனியா மாவட்டஅரச அதிபர் சமன் பந்துலசேன தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறுதெரிவித்தார்

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

நாளையதினம் ஊரடங்குசட்டம் தளர்த்தப்படுகின்றது. எனவே பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு ஒன்றுகூடுவார்கள் என்று எதிர்பார்கின்றோம்.

அந்தவகையில் அத்தியாவசிய பொருட்களை மாத்திரம் விற்பனை செய்யும் வியாபார நிலையங்களை மாத்திரம் திறப்பதற்கு முடிவுசெய்துள்ளோம்.

குறிப்பாக பலசரக்குகடைகள், மருந்தகங்கள், மரக்கறி விற்பனை நிலையங்கள் மாத்திரம் நாளை திறக்கபடும்.

எனவே வியாபார நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக பொதுமக்கள் முண்டியடிக்க வேண்டாம் என்று வினயமாக கேட்டுக்கொள்கின்றோம்.

வவுனியாவில் மக்களிற்கு தேவையான பொருட்களை வழங்குவதற்கு வர்த்தக சங்கத்தினர் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

அதேபோல கொழும்பில் இருந்தும் பொருட்களை வவுனியாவிற்கு கொண்டு வருவதற்காக ஏற்பாடுகள் செய்துள்ளோம். எனவே வவுனியாவில் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு.

அத்துடன் கிராமங்களில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களிற்கு பொருட்களை வழங்குவதற்கு மொத்த வியாபாரிகள் தயாராக இருக்கின்றனர்.

எனவே பொதுமக்கள் கிராமங்களில் அமைந்துள்ள கடைகளில் பொருட்களை கொள்வனவு செய்யமுடியும். நகரங்களை அண்டிவர வேண்டிய தேவையில்லை.

அத்துடன் பொலிஸாரின் அனுமதிகளை பெற்று நாளையதினம் விவசாயிகள் தமது பொருட்களை சந்தைப்படுத்தமுடியும்.

அத்துடன் ஆலயங்களில் பொதுமக்கள் அதிகமாக ஒன்றுகூடுவதை தவிர்த்துக்கொள்ளவதுடன், நோய்பரவலை தடுப்பதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்புகளை வழங்குமாறு கேட்டுகொள்கின்றோம்.

அத்துடன் தங்களது கிராமங்களில் யாரேனும் நோய் தொற்றுக்கு உள்ளாகியதாக சந்தேகங்கள் ஏற்பட்டால் அவர்கள் தொடர்பான தகவல்களை பொலிஸ் திணைக்களத்தின் குறித்த இலக்கத்திற்கோ 0242222226 அல்லது மாவட்ட பொது வைத்தியசாலையின் 024 2222 761 குறித்த இலக்கத்திற்கோ தொடர்பு கொண்டு தெரிவிக்க முடியும் என்று மேலும் தெரிவித்தார்.
Previous Post Next Post