நிர்பயா காெலை குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டனர்!!

டெல்லி மருத்துவ கல்லூரி மாணவியான நிர்பயா, கடந்த 2012ம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படு கொலை செய்யப்பட்ட வழக்கில் பிடிபட்ட நான்கு குற்றவாளிகளுக்கும் இன்று (20) காலை தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது.

நிர்பயாவின் தாய் 7 வருடங்கள் சட்டத்துடன் போராடி குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை கிடைக்க வழியமைத்தார்.

தூக்கு தண்டனையில் இருந்து தப்பிக்க நேற்று (19) நள்ளிரவு குற்றவாளிகளின் தரப்பில் இருந்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு அனைத்து சட்ட வழிகளும் மூடப்பட்டதால் திட்டமிட்டபடி இன்று அதிகாலை 5.30 மணிக்கு குற்றவாளிகளான அக்சய் குமார் சிங், வினய் குமார் சர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய நால்வரும் தூக்கிலிடப்பட்டனர்.

அவர்களுடைய உடல் அரை மணி நேரம் தூக்கிலிடப்பட்டதாகவும் அதன்பின் நால்வரும் மரணம் அடைந்ததை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

முன்னதாக 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதும் திஹார் சிறையின் முன் கூடியிருந்த நூற்றுக்கணக்கானோர் கைதட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post