நாட்டு மக்களிடம் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை!

சட்டம் மற்றும் முன் எச்சரிகெகையான செயற்பாடுகளுக்கு மக்கள் பங்களிப்பை வழங்குவதன் மூலம் சவால்களை வெற்றி கொள்ள முடியும் என கேட்டுக்கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியிட்ட அறிக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.

கொரோனா தொற்றுக்கிருமி பரவுவதைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவுகளை அரசாங்கம் விதித்துள்ளது.

நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் அனைவரிடமும் நான் கேட்டுக்கொள்வது என்னவெனில், சட்டம் மற்றும் முன் எச்சரிக்கையான செயற்பாடுகளுக்கு உங்கள் பங்களிப்பை வழங்கவதன் மூலம் இந்த சவால்களை வெற்றி கொள்ள முடியும் என்பதே.

இலத்திரனியல் ஊடகங்கள் மூலமாக இச்செய்தியை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

இந்த திட்டங்களை வெற்றிகரமாக மாற்ற நாட்டின் இளைஞர்கள் எடுத்த முயற்சியை நான் பாராட்டுகிறேன் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
Previous Post Next Post