கொரோனா வைரஸ்- ஆசியாவின் முதல் பணக்காரர் செய்யும் நடவடிக்கை!!

கொரோனா வைரஸ் தொற்றை எதிர்நோக்கியுள்ள இலங்கை உட்பட்ட ஆசிய நாடுகளுக்கு ஆசியாவின் முதல்தரப் பணக்காரரான ஜெக் மா 1.8 மில்லியன் முகக்கவசங்களையும், 210 ஆயிரம் கொரோனா வைரஸ் பரிசோதனை உபகரணங்களையும் வழங்கவுள்ளார்.

இது தொடர்பில் தமது டுவிட்டர் செய்தியில் அறிவித்துள்ளார்.

இந்த பொருட்களை விநியோகிப்பது எளிதான காரியமல்ல. எனினும் அதனை செய்வோம் என்று ஜெக் மா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜெக் மா, அலிபாபா குழுமம் மற்றும் 2014ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட ஜெக் மா நிதியம் ஆகியவற்றின் ஸ்தாபகராவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post