கொரோனா தொற்றினால் குணமடைந்த முதலாவது நபரால் காப்பாற்றுப்பட்ட இன்னுமொருவர்!!

இலங்கையில் கொரோனா நோய் தொற்றுக்குள்ளாகிய முதலாவது நோயாளி நேற்று மீண்டும் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

முழுமையாக குணமடைந்த முதலாவது கொரோனா நோயாளி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னரே வீடு திரும்பியிருந்தார்.

இந்நிலையில், இன்னும் ஒரு நோயாளிக்கு இரத்தம் பெற்றுக்கொள்வதற்காக அவர் நேற்று வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

அவரது இரத்தம் அவசியமாக இருந்த மற்றுமொரு கொரோனா நோயாளிக்கு பொருந்தக்கூடிய இரத்தம் அவரிடம் உள்ளது இதனால் வைத்தியசாலை அவரிடம் இரத்தம் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

அதற்கு இணக்கம் வெளியிட்ட அவர் வைத்தியசாலைக்கு அம்பியுலன்ஸ் ஊடாக அழைத்து வரப்பட்டு அவரிடம் இரத்தம் பெற்றுக் கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post
HostGator Web Hosting