திரைப்பட நடிகரும் இயக்குநருமான விசு காலமானார்!

திரைப்பட நடிகரும், இயக்குநருமான விசு (72 வயது) இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

சிறுநீரகப் பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் அவர் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலர், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

சம்சாரம் அது மின்சாரம், மணல் கயிறு உள்ளிட்ட பல படங்களை விசு இயக்கியுள்ளார். அத்துடன், உழைப்பாளி, மன்னன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் இவர் நடித்துள்ளார். வசனகர்த்தா, கதாசிரியராகவும் பல்வேறு படங்களில் பணியாற்றியுள்ளார்.
Previous Post Next Post