கல்முனையில் கருணை உள்ளம் அறக்கட்டளை அமைப்பினால் முககவசங்கள் வழங்கிவைப்பு

செ.துஜியந்தன்

இன்று கல்முனை நகரில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களைப்பாதுகாக்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் நடவடிக்கையில் கல்முனை ப்pராந்திய சுகாதார பணிமனை ஈடுபட்டது. கல்முனைப்பிராந்திய சுகாதாரப்பணிப்பாளர் டாக்டர் சுகுணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதேச பொதுச்சுகாதாரப்பரிசோதகர்கள் சுகாதாரப்பணியாளர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

இதேவேளை கருணை உள்ளம் அறக்கட்டளை அமைப்பினால் இன்றைய தினம் கல்முனை ப்pரதேசத்திற்குட்பட்ட பொதுமக்களுக்கு ஐயாயிரம் முககவசங்கள் வழங்கிவைக்கப்பட்டது. இதில் கல்முனைப்பிராந்திய சுகாதாரப்பணிமனைக்கும் கருணை உள்ளம் அறக்கட்டளை அமைப்பின் இளைஞர்களினால் முககவசங்கள் சுகாதாரப்பணிப்பாளர் சுகுணணிடம் கையளிக்கப்பட்டன. இதன்போது வீடு வீடாகச் சென்ற இளைஞர்கள் கொரோனா வைரஸ் தொடர்பில் பொதுமக்களை தெளிவுபடுத்தியதோடு முககசவங்களையும் வழங்கி வைத்தனர்.


Previous Post Next Post