சரக்கு ரயில்கள் மோதி விபத்து – மூவர் உயிரிழப்பு!!

மத்தியப் பிரதேசத்தில் இரண்டு சரக்கு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

மத்தியப் பிரதேசம், சிங்க்ராலியில் தேசிய அனல் மின் நிறுவனத்துக்கு நிலக்கரி ஏற்றிச் சென்ற ரயிலும் மற்றொரு ரயிலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நேருக்குநேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இரு ரயில்களும் ஒரே தண்டவாளத்தில் அனுமதிக்கப்பட்டதே விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது.

இதையடுத்து அப்பகுதியில் மீட்புபணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் விபத்து தொடர்பாக விசாரணையும் நடைபெற்று வருகிறது.

அண்மையில் வெளியான ரயில்வே புள்ளிவிபரங்களில் 2019இல் நிகழ்ந்த ரயில் விபத்துகளில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post