ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டாலும் மதுபான சாலைகள் அனைத்தும் மூடப்படும்!

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டாலும் அனைத்து மதுபான சாலைகளும் திறக்கப்படாது என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுல்செய்யப்படும் முன்னர் கொரோனா வைரஸ் தொடர்பில் சமூக இடைவெளி எச்சரிக்கையையும் பொருட்படுத்தாது பெருமளவானவர்கள் மதுபான சாலைகளின் முன்னாள் நின்றமையை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது

பொதுமக்கள் ஒன்றுக்கூடலை குறைக்கவே ஊரடங்கு சட்டம் அமுல்செய்யப்பட்டது.

எனினும் மதுபான சாலைகளில் வரிசையில் நின்று மதுபானங்களை கொள்வனவு செய்தவர்கள் அதனை மீறியுள்ளனர் என்றும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
Previous Post Next Post
HostGator Web Hosting