யாழில் மத போதனையில் கலந்து கொண்ட தாய் ஒருவரின் மகன் வைத்தியாசாலையில் அனுமதி!

யாழில் இடம்பெற்ற கிறிஸ்தவ மத போதனையில் கலந்து கொண்ட தாய் ஒருவரின் மகன் கொரோனா தொற்று சந்தேகத்தில் வவுனியா வைத்தியசாலையில் இன்று மாலை 5.00 மணியளவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 15ம் திகதி யாழ்ப்பாணம் செம்மணி வீதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் ஒன்றில் சுவிஸ்சில் இருந்து வருகை தந்த மத போதாகர் ஒருவரினால் போதனை வழங்கப்பட்டது.

குறித்த மத போதகர் சுவிஸ் திரும்பிய நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த மத போதகருடன் தொடர்பை ஏற்படுத்திய நபர் ஒருவர் யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த போதனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வவுனியா, புளியங்குளம் வடக்கு, முததுமாரி நகர் பகுதியில் இருந்து சென்ற 06 பேர் சுகாதாரப் பிரிவினரினால்தனிமைப்படுத்தப்பட்டனர்.

அவர்களில் ஒருவருடைய மகன் ஒருவருக்கு அதிகளவிலான காய்சல் ஏற்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா? என்ற சந்தேகத்தில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த 31 வயதுடைய இளைஞனின் தயார் மத போதனையில் கலந்து கொண்டிருந்த நிலையிலேயே தற்போது மகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

குறித்த இளைஞனை வவுனியா வைத்தியசாலையில் தனிமைப்படுத்தியுள்ளதுடன் கொரோனா தொற்று உள்ளதா என்ற பரிசோதனை நடவடிக்கைகளையும் வைத்தியர்கள் முன்னெடுத்துள்ளனர்.Previous Post Next Post