ஊரடங்கு நேரத்தில் மதுபானம் விற்ற நபர் கைது!!

ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 52 வயதான நபரை தாம் நேற்று கைது செய்துள்ளதாக இமதுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இமதுவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.வி.கே. உபுல்குமாரவுக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து பொலிஸார், மதுபானம் கொள்வனவு செய்பவர் போல் ஒருவரை அனுப்பி அந்த நபரை கைது செய்துள்ளனர்.

இந்த நபர் இதற்கு முன்னரும் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் தண்டனை பெற்றவர் எனவும் சந்தேக நபரை காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
Previous Post Next Post