அனைத்து மதங்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்வு!

இலங்கையில் உள்ள அனைத்து மதங்களுக்கு இடையிலும் சகிப்புத்தன்மை மற்றும் சமூகங்களுக்கு இடையில் சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்வு மன்னாரில் இடம்பெற்றது.

மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதையம் ஏற்பாடு செய்த உழவர் திருநாள் நிகழ்வு இன்று மதியம் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வு மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதயத்தின் இயக்குநர் அருட்தந்தை எஸ்.அன்ரன் அடிகளார் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது பொங்கல் பொங்கப்பட்டதுடன் சர்வமதத் தலைவர்கள் சமாதான புறாவை பறக்கவிட்ட நிலையில் நிகழ்வுகள் இடம்பெற்றன.

குறித்த நிகழ்வில் விருந்தினராக மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் ,சர்வமத தலைவர்கள், கலந்து கொண்டதோடு,கிராம மட்ட பிரதி நிதிகள்,சர்வமத ஒன்றியத்தின் பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post