குரில் தீவுகளில் பாரிய நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டதாக தகவல்!!

பசுபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள குரில் தீவுகளில் இன்று காலை 7.5 ரிக்டர் அளவிலான பாரிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.

ரஷ்யாவுக்கு சொந்தமான இந்த குரில் தீவுகளில் கடலின் அடியில் 35 கிலோமீற்றர் ஆழத்தில் குறித்த நிலநடுக்கமானது பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.

இதனை அடுத்து, உடனடியாக குரில் தீவுகள் மற்றும் பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஹவாய் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதும் தொடர்ந்து நிலநடுக்கம் பதிவாகாத நிலையில் சுனாமி எச்சரிக்கை மீள பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post