ஊரடங்கு சட்டத்தால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும் வியாபாரிகளுக்கும் நிவாரண திட்டங்கள் அமுல்படுத்த வேண்டும்-அனுஷா சந்திரசேகரன்


இது தொடர்பில் மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவர் அமரர் பெ.சந்திரசேகரனின் புதல்வியும், சட்டத்தரணியுமான அனுஷா சந்திரசேகரன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

அரசாங்க, தனியார் துறைக்கு வழங்கப்பட்டுள்ள வேதனத்துடனான விடுமுறை நாள் சம்பளத்துக்காக தொழில்புரியும் எமது தோட்டத்தொழிலாளர்களுக்கு வழங்கப்படாவிட்டால் அடுத்த மாதத்துக்குரிய சம்பளம் மிகவும் குறைவாக கிடைக்கும் நிலையே உள்ளது.

ஆகவே கொரோனா பரவுதலை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் வழங்கியுள்ள வேதனத்துடனான விடுமுறை பெருந்தோட்டத்துறை தொழிலாளிகளுக்கும் கிடைப்பதை கம்பனிகள் உறுதி செய்ய வேண்டும்.

அதே வேளை, தோட்ட தொழிலாளர்கள் உள்ளடங்களாக நாள் சம்பளத்திற்கு வேலை செய்யும் ஏனைய தொழிலாளர்களுக்கும், நடமாடும் சிறு வியாபாரிகளுக்கும் நிவாரண திட்டங்கள் எதிர்காலங்களில் அமுல்படுத்த வேண்டும்.

இந்த கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டால் அத்தியாவசிய பொருட்களை வேறு வழிகளில் பெற்றுக்கொள்ளக்கூடிய வசதிகளையும் அரசாங்கமும், கம்பனிகளும் மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Previous Post Next Post