ஊரடங்கு நேரத்தில் தனி நபரொருவரின் மனிதாபிமான செயல்

இலங்கைக்கு சுனாமி பேரிடர், வெள்ளம், மண் சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் போது நாட்டு மக்கள் அனைவரும் அனைத்து பேதங்களை ஒதுக்கி வைத்து விட்டு மனிதாபிமானத்திற்கு முதலிடம் கொடுத்து செயற்பட பழகியவர்கள்.

கொரோனா வைரஸ் தற்போது இலங்கையிலும் ஏற்பட்டுள்ளது. இந்த காலத்தில் நாட்டு மக்களின் மனிதாபிமானத்தின் உயர் குணாதியத்தை வெளிக்காட்டும் சம்பவங்கள் தொடர்பான பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

அனுராதபுரத்தில் ஒருவர் செய்துள்ள உன்னதமான பணி தொடர்பாக ஒரு பதிவு சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அன்றாடம் கூலி தொழில் செய்து வாழ்க்கையை கொண்டு நடத்தும் அப்பாவி மக்கள் தமது வாழ்வாதாரத்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

எனினும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய கட்டாயம் காணப்படுகிறது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் கூலி தொழில் செய்து வாழும் அப்பாவி மக்களுக்காக நாட்டின் ஏனைய குடிமக்கள் செய்ய முடிந்த காரியத்தை தனி ஒருவர் செய்துள்ளார்.

அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் ஏனையவற்றை மேசை மீது வைத்து, இதில் தேவையான ஏதேனும் இருந்தால், அதனை எடுத்துச் செல்லுமாறு சிறிய விளம்பரத்தை வைத்துள்ளார்.

ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நேரத்தில் அன்றாடம் வேலை செய்ய முடியாதவர்கள், உங்களுக்கும், உங்கள் வீட்டுக்கும், குழந்தைகளுக்கும் தேவையான ஏதேனும் இந்த மேசையில் இருந்தால் எடுத்துச் செல்லுங்கள்.(இலவசம்) நன்றி தேவையில்லை என அந்த நபர் அதில் குறிபபிட்டுள்ளார்.
Previous Post Next Post
HostGator Web Hosting