ஊரடங்கு சட்டம்! ஊடகவியலாளர்கள், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச அதிகாரிகளுக்கு அனுமதி!!

பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஊடகவியலாளர்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச அதிகாரிகள் ஊடக அடையாள அட்டை மற்றும் தமது பதவிக்கான அடையாள அட்டையை பயனபடுத்த முடியும்.

இந்த விடயத்தை அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க கலுவேவ தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி தொடக்கம் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படுகிறது.
Previous Post Next Post
HostGator Web Hosting